2013இல் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்தில் வான் பெர்சீ | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | இராபின் வான் பெர்சீ | ||
பிறந்த நாள் | 6 ஆகத்து 1983 | ||
பிறந்த இடம் | ராட்டர்டேம், நெதர்லாந்து | ||
உயரம் | 1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்) | ||
ஆடும் நிலை(கள்) | முன்னணி தாக்குபவர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | மான்செஸ்டர் யுனைடெட் | ||
எண் | 20 | ||
இளநிலை வாழ்வழி | |||
1997–1999 | எக்செல்சியர் | ||
1998–2001 | பெயிநூர்து | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2001–2004 | பெயிநூர்து | 61 | (15) |
2004–2012 | ஆர்சனல் | 194 | (96) |
2012– | மான்செஸ்டர் யுனைடெட் | 59 | (38) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2000 | நெதர்லாந்து U17 | 6 | (0) |
2001 | நெதர்லாந்து U19 | 6 | (0) |
2002–2005 | நெதர்லாந்து U21 | 12 | (1) |
2005– | நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி | 85 | (45) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 09:58, 11 மே 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 13 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது. |
இராபின் வான் பெர்சீ (Robin van Persie, பிறப்பு: ஆகத்து 6, 1983) டச்சு காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு முன்னணியில் தாக்குபவராக விளையாடுவதோடன்றி நெதர்லாந்து தேசிய காற்பந்து அணிக்கு அணித்தலைவராகவும் விளங்குகிறார். இவர் பெயிநூர்து கழகத்தில் தமது இளமையை கழித்தவர். 2004இல் ஆர்சனல் கால்பந்துக் கழகத்தில் சேர்ந்த வான் பெர்சீ ஆகத்து 16, 2011இல் அக்கழக அணித்தலைவராக உயர்த்தப்பட்டார். அடுத்த ஆண்டிலேயே ஆர்சனலின் எதிரியாகக் கருதப்படும் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு மாறினார். இவர் உலகின் தலைசிறந்த தாக்குதல் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். புகழ்பெற்ற டச்சு காற்பந்தாட்ட வீரரான மார்க்கோ வான் பாஸ்டனுடன் ஒப்பிடப்படுகிறார்.
வான் பெர்சீ நெதர்லாந்துக்காக 17-கீழ், 19-கீழ் மற்றும் 21-கீழ் அணிகளில் பன்னாட்டு ஆட்டங்களில் ஆடியுள்ளார். தேசிய அணிக்காக 2005இல் உருமேனியாவுடனான ஓர் நட்பு ஆட்டத்தில் அறிமுகமானார். பின்லாந்துடனான ஆட்டத்தில் தமது முதல் பன்னாட்டு கோலை அடித்தார்; இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து 4-0 என்ற கணக்கில் வென்றது. இதுவரை பெர்சீ தமது நாட்டிற்காக 83 முறை ஆடியுள்ளார்; இவற்றில் 42 கோல்கள் அடித்துள்ளார். வான் பெர்சீ தமது நாட்டிற்காக 2006 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2008, 2010 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.